என்னை விட யாரும் செம்பருத்தி சீரியலில் வரும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தை நன்றாக பண்ண முடியாது என்று ஜனனி தெரிவித்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடரில் மிகவும் பிரபலமான தொடர் செம்பருத்தி. இதில் அகிலாண்டேஸ்வரியாக பிரியா ராமன் ,இரண்டு மகன்களாக கார்த்திக் ராஜ்,கதிர் மற்றும் இருண்டு மருமகள்களாக ஷபானா மற்றும் ஜனனி அசோக் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள் .
சமீபத்தில் இந்த சீரியலிலிருந்து ஜனனி விலகியதாக தனது யூடுயூப் சேனனில் அழுது கொண்டே வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார் .அதில் இனி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்றும், கால்ஷீட் பிரச்சினை காரணமாக செம்பருத்தி தொடரில் இருந்து நீக்கியதாகவும் ,, ஐஸ்வர்யா கதாபாத்திரத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி என்றும், இனி அந்த கதாபாத்திரத்தில் நடிப்பவருக்கு ஆதரவு கொடுங்கள் என்றும், திடீரென நீக்கப்பட்டது தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறி கதறி அழுதிருந்தார் .
இது தொடர்பாக பேட்டி ஒன்றில் விளக்கமளித்த ஜனனி ,லைவ்வில் ரசிகர்களிடம் அழகு குறிப்புகள் பேசி கொண்டிருந்த போது செம்பருத்தி தொடரில் இருந்து தனக்கு போன் செய்து ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்ற கூறிய போது ஏற்று கொள்ள முடியாமல் அழுததாகவும், அன்று முழுவதும் தான் அழுததாகவும், விரைவில் அதிலிருந்து வெளி வருவேன் என்றும் , தனக்கு அந்த தொடர் நிறைய கற்று தந்ததாகவும் , நண்பர்களை தான் அதிகமாக மிஸ் பண்ணுவேன் என்றும் கூறினார் . மேலும் கூறிய அவர் அந்த ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தன்னை தவிர யாராலும் நன்றாக பண்ண முடியாது என்று தெரிவித்துள்ளார் . மேலும் தான் அழுத போது எனக்கு ஆதரவளித்து ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…