தீபாவளிக்கு புது படங்கள் ரீலீஸ் செய்யப்பட மாட்டாது என்று இயக்குனரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது . அதனையடுத்து சமீபத்தில் நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி 50% இருக்கைகளுடன் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனால் தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் விபிஎப் கட்டணம் செலுத்த எதிர்ப்பு தெரிவித்து புது திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாது என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது . அதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் படத்தின் வசூலில் 50% -ஐ அளித்தால் விபிஎப் கட்டணத்தை கைவிடுவதாக அறிவித்தனர் .
இந்த விபிஎப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்த தொடர்ந்து நடந்து வந்த நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்ளவில்லை என்றும், எனவே விபிஎப் கட்டணம் குறித்து முடிவு வரும் வரை புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படாது என்றும் , எனவே அனைத்து தயாரிப்பாளர்களும் தங்களது புதிய படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தங்களுடைய சங்க நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும்படி இயக்குநரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான பாரதிராஜா அறிக்கையை வெளியிட்டு தெரிவிதீதிருந்தார் .
அதனை தொடர்ந்தும் பலமுறை இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்ததாகவும், எனவே தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகாது என்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார் . எனவே தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த பிஸ்கோத், களத்தில் சந்திப்போம், எம்ஜிஆர் மகன் ஆகிய படங்கள் வெளியாகாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்பபட்டுள்ளதும், பழைய மெகா ஹிட் படங்களை திரையிட உள்ளதாகவும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…
சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'கேம் சேஞ்சர்' படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில்,…
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…
வாஸ்து சாஸ்திரம் என்றால் என்ன, இந்த ஆண்டில் வரும் தேதி ,நேரம் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம்…
சென்னை: சென்னையில் நான்காவது முறையாக வேளாண் உழவர் நலத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள, செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை இன்று…