இந்த வாரமே வெளியேறினாலும் வருத்தப்பட தேவையில்லை என்று கூறி சோமை நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 4 தொடங்கி இன்றுடன் 50 நாட்கள் நிறைவடைந்துள்ளது.மேலும் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்ததை வைத்து போட்டியாளர்களை வச்சு செய்வது வழக்கம் .அது மட்டுமின்றி நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டு, குறைவான வாக்கை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் . அந்த வகையில் நேற்றைய தினம் நாமினேஷன் பட்டியலில் இருந்து ஆரி மற்றும் ரியோ அதிக வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டனர் . மீதமிருப்பவர்கள் சோம்,அனிதா , பாலாஜி, சம்யுக்தா ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் செக்கன்ட் புரோமோவில் சோம் அவர்கள் தான் திக்கு வாய் என்பதை உணர்ச்சிபூர்வமாக கூறுகிறார்.அவர் இந்த நிகழ்ச்சியில் வருவதற்கு முன்பு தன்னை பற்றி யாருக்கும் தெரியாது என்றும், இப்போது அனைவருக்கும் தெரிஞ்சிருக்கும் .எனக்கு பேசும் போது சில விஷயங்கள் தடுக்கும்.அது இல்லாமல் தான் இதுவரை பேசி இருக்கிறேன்.அதற்கு கமல்ஹாசன் இப்போது நன்றாக பேசுகீறீர்கள் . மிகப் பெரிய தேர்வில் வெற்றி பெற்றுள்ளீர்கள் .அதனால் இப்போதே நீங்கள் வெளியேற்றப்பட்டாலும் வருத்தப்பட தேவையில்லை என்று கூறிவிட்டு இந்த வாரம் நாமினேஷனில் இருந்து சோம் காப்பாற்ற பட்டுள்ளதாக அறிவிக்கிறார்.மீதமுள்ள பாலாஜி, அனிதா, சம்யுக்தா மற்றும் சுச்சி ஆகியோரில் இந்த வாரம் வெளியேறுவது யார் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…