வார்த்தை தேவையில்லை…. உலக எமோஜி தினம் இன்று…!
வருடந்தோறும் ஜூலை 17 ஆம் தேதி வாரத்தையின்றி பேசும் எமோஜி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போதைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலும் சமூக வலைதளங்கள் அதிக அளவில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சமூக வலைதளங்களில் பலராலும் விரும்பி உபயோகப்படுத்தப் படக்கூடிய ஒன்று தான் எமோஜிக்கள். தங்களது சோகம், அழுகை, கவலை, சிரிப்பு என அனைத்து மனநிலைகளையும் வார்த்தை இன்றி பகிர்வதற்கான சிறந்த முறையாக எமோஜி உள்ளது.
இந்த எமோஜிக்கள் மூலமாக நாம் சொல்ல விரும்புவதை எப்படி வேண்டுமானாலும் சொல்லி விடமுடியும். நாம் ஒருவருக்கு இதனை அனுப்பும் பொழுது அவர்களால் எளிதில் புரிந்து கொள்ளவும் முடியும். பலரும் தற்பொழுது எமோஜி மூலமாக மட்டுமே பேசிக் கொள்கின்றனர். சாப்பிட்டீர்களா என்று கேட்பதற்கு எமோஜி தான். ஆம், இல்லை என்பதற்கும் எமோஜி தான். கேள்விகளுக்கும் சரி, பதில்களுக்கு சரி எமோஜி தான் பயன்படுகிறது. சிலர் மட்டுமே தற்பொழுது சிறிய உரையாடலுக்கும் வார்த்தைகளை உபயோகிக்கின்றனர்.
இந்த எமோஜிக்கு மொழி தடையில்லை. எல்லோருக்கும் ஒன்றுதான் எல்லா மொழியினரும் பயன்படுத்த கூடிய வகையில் எமோஜிக்கள் உள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17-ஆம் தேதி உலக எமோஜி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை லண்டனை மையமாகக் கொண்ட எமோஜிபீடியா அமைப்பாளர் ஜெரேமிபுர்ஜ் அவர்கள் 2014 ஆம் ஆண்டில் உருவாக்கியதாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் வாட்ஸ்அப், ட்விட்டர், பேஸ்புக் என அனைத்து இடங்களிலும் எமோஜிக்கள் தான் நிறைந்து காணப்படுகின்றது. இந்த எமோஜி பலராலும் மிக விரும்பி உபயோகப்படுத்தக்கூடிய ஒன்று என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.