இனிமே வேஸ்ட் பண்ணாதீங்க! பழைய சாதத்தை பயன்படுத்தி பஞ்சு போல ஆப்பம் செய்வது எப்படி தெரியுமா?
நமது வீட்டில் மீதமாகும் பழைய சாதத்தை வீணாக்காமல், அதையும் வைத்து பஞ்சு போல ஆப்பம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
பொதுவாக நம் ஆப்பம் செய்வதற்கு தனியாக மாவு வாங்கி தன் செய்வதுண்டு. ஆனால், நமது வீட்டில் மீதமாகும் பழைய சாதத்தை வீணாக்காமல், அதையும் வைத்து பஞ்சு போல ஆப்பம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையானவை
- பச்சரிசி – 2 கப்
- உளுந்தம் பருப்பு – ஒன்றரை ஸ்பூன்
- பழைய சாதம் – ஒரு கப்
- தேங்காய் துருவல் – 1 கப்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பவுலில் 300 கிராம் பச்சரிசி, ஒன்றரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 4 மணி நேரத்திற்கு ஊற வைக்கவேண்டும். பின் மிக்ஸியில் தேங்காய் துருவல், பழைய சாதம் ஒரு கப் தண்ணீர் ஊற்றி இரண்டையும் லேசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் இதனுள் உளுந்தை ஊற வைத்து எடுத்த பச்சை அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்க வேண்டும். தற்போது இதை வேற்று பெளவுலில் மாற்றி எடுத்து, நன்கு கலந்து விட்டு பின் மூடி வைத்து 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். 8 மணி நேரம் கழித்து தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கிளற வேண்டும். இப்போது ஒரு கடாயில் ஊற்றி ஆப்பம் சுட தயாரான நிலையில் உள்ளது.