இனி வாட்ஸ் ஆப்பில் பணப்பரிமாற்றம் செய்யலாம்..இந்த நாட்டில் மட்டும்.!

Default Image

ஆப்பில் பணப்பரிமாற்றம் செய்யலாம் ஆனால் இந்த புதிய அப்டேட் பிரேசில் நாட்டில் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

பணத்தை மற்றவருக்கு அனுப்புவதற்கு நிறய வழிமுறைகள் இருந்தாலும், பொதுவாக பொது மக்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்துவது கூகுள் பே என்ற GPay தான்.

இந்நிலையில் கூகுள் பேக்கு போட்டியாக தற்போது வாட்ஸ்ஆப்பில்  பண பரிவர்த்தனை வந்துவிட்டது. ஏற்கனவே மெசஜ் மற்றும் தகவல்களை பரிமாதவதற்கு பயன்படும் ஒன்றாக வாட்ஸ்அப் இருந்துவந்த நிலையில் தற்போது புதிய அப்டேட்டாக பண பரிவர்த்தனை செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது இந்த புதிய அப்டேட் பிரேசில் நாட்டில் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் எல்லா நாடுகளுக்கும்  இந்த வசதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதியில் நாம் எங்கே இருக்கிறோமோ அதற்கு அருகில் உள்ள கடைகளில் பட்டியலைப் பார்க்கவும் பொருட்களை வாங்கிய பின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணத்தை செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பணம் செலுத்தும்போது மோசடிகளை தவிர்க்கும் வகையில் 6 இலக்க எண் அல்லது கைரேகை பாதுகாப்பையும் இந்த பண பரிவர்த்தனை அப்டேட் உள்ளது.இந்த அப்டேட் நம்ம இந்தியாவுக்கும் எப்போ வரும் காத்திருப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்