இனி பேஸ்புக்கில் AR-செல்பிஸ் கிடையாது.. பேஸ்புக் நிறுவனம் அதிரடி!
பேஸ்புக், தனது AR-பேஸ் பில்டருக்கான செயலியான MSQRD செயலியை ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம், 13ஆம் தேதி பேஸ்புக் நிறுவனம், MSQRD எனும் செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் IOSல் வெளியிட்டுள்ளது. அதன்மூலம் நாம் நமது படங்களை பில்டர் செய்யலாம். அதாவதுநாம் எடுக்கும் செல்பீஸை நாய், பூனை, போன்றவற்றாக மாற்றலாம்.
அந்த செயலியில் AR பயன்பாடு முக்கிய பங்கு வகித்தது. அந்த கருவிகளில் ஒன்றான ஸ்பார்க் AR, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கான முக வடிப்பான்களை உருவாக்கிறது. இது செயலியில் மட்டும் கிடையாது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியிலும் உண்டு.
தற்பொழுது இந்த செயலியை நிறுத்துவதற்காக பேஸ்புக் நிறுவனம் முன்வந்துள்ளது. பேஸ்புக் நிறுவனம், 2016 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த செயலிக்கு ஆதரிப்பதை நிறுத்தியது. அதன் பயனாளர்கள் குறைந்ததால், இந்த செயலியை ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோரிலிருந்து ஏப்ரல் மாதம் நீக்கவுள்ளது என தெரிவித்தது. மேலும், இதற்க்கு போட்டியாக ஸ்னப்சேட் எனும் செயலி உள்ளது குறிப்பிடத்தக்கது.