கொரோனா தொற்று காரணமாக H-1B, L-1 விசாக்களுக்கான நேர்காணல் இல்லை என அமெரிக்கா அறிவிப்பு.
அமெரிக்காவில் வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அமெரிக்கா “H-1B” விசா வழங்கி வருகிறது. அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களை இந்த விசாவின் கீழ் பணியில் நியமிக்கின்றனர்.
இந்த ‘H-1B’ விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும். அதன் பிறகும் தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளலாம். இந்த “H-1B” விசாவை உலக நாடுகளில் அதிகமாக இந்தியர்களும், சீனர்களும் தான் பெற்று வருகின்றனர்.
இதன்பிறகு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் “H-1B”விசாவில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், H-1B விசா மற்றும் (L-1, O-1) குடியுரிமைச்சாராத பிற விசாதாரர்களுக்கு நேரடி நேர்காணல் இல்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் நாள்தோறும் 2 லட்சத்துக்கும் மேல் கொரோனா பதிவாகும் நிலையில், விசா நடைமுறையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று மூன்றாவது ஆண்டாக நீடிப்பதால், விசா வழங்குவதை எளிதாக்க 2022-ஆம் ஆண்டில் சில பணி-விசா வகைகளுக்கான நேர்காணல் தற்காலிகமாக கைவிடுகிறது.
அதன்படி, வெளிநாட்டில் இருந்து விண்ணப்பிக்கும் H-1B, L-1 மற்றும் O-1 உள்ளிட்ட விசாக்களுக்கான விண்ணப்பதாரர்கள் அமெரிக்கத் தூதரகத்தில் நேரில் நேர்காணல் செய்ய வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…