வீடும் இல்லை, செய்ய வேலையும் இல்லை.! வேண்டுமென்றே ஜெயிலுக்கு சென்ற முதியவர்.!
- ஜெர்மனியில் முதியவர் ஒருவர் தங்குவதற்கு வீடும் இல்லை, செய்ய வேலையும் இல்லை என திண்டாடி வந்துள்ளார்.
- இதனால் மீதம் இருக்கும் காலத்தை அரசு பணத்தில் ஓட்டிவிடலாம் என முடிவு செய்த அவர் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது வேண்டுமன்றே காரை ஏற்றி விபத்துக்குள்ளாகினர்.
ஜெர்மனியின் மோனோசென்க்ளாட்பாஹ் நகரைச் சேர்ந்த முன்னாள் கணினி அறிவியலாளரான 62 வயதான எபர்ஹார்ட் (Eberhard). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தன் வேலையை இழந்தார். பின்னர் வேலை இல்லாத காரணத்தால் அவரது சேமிப்பு பணம் முழுவதயும் எடுத்து கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலாசென்றுள்ளார்.
இந்நிலையில், கையில் இருந்த மொத்த பணமும் காலியாவது தெரியாமல் அவரது காரிலேயே வசித்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் அவரது டிரைவிங் லைசென்சும் காலாவதியானது. பின்பு இதற்கு மேல் தம்மால் சமாளிக்க முடியாது என உணர்ந்த அவர், பேசாமல் ஏதேனும் குற்ற செய்து சிறைக்கு சென்று விட்டால் சிறிது காலமாவது அரசாங்க பணத்தில் தங்கலாம், சாப்பிடலாம் என்று நினைத்தார். இதனால் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது வேண்டுமன்றே காரை கொண்டு மோதி விபத்தை ஏற்படுத்தினார். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 48 வயதான நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதியவர் எபர்ஹார்ட்-ஐ போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் வீடு மற்றும் சாப்பிட வழியில்லாத காரணத்தால் நான் வேண்டுமன்றே தான் விபத்தை ஏற்படுத்தியாக கூறியுள்ளார். இதனை கேட்டு யோசித்த நீதிபதி, எபர்ஹார்ட்-க்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். பின்னர் தண்டனை அறிவிக்கப்பட்டதும் அந்த முதியவர் மகிழ்ச்சியடைந்தார். பொதுவாக விபத்து சம்பவங்களில் உயிரிழப்பு ஏற்பட்டால் மட்டுமே ஜெர்மனியில் ஆயுள் தண்டனை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.