அபராதம் எல்லாம் கிடையாது, உடனடியாக கைது தான் – சிங்கப்பூரில் அதிரடி!

Default Image

சிங்கப்பூரில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் எல்லாம் கிடையாது, உடனடியாக கைது தானாம்.

கடந்த பல மாதங்களாகவே உலகம் முழுவதிலும் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து கொண்டேதான் செல்கிறது. இதன் தீவிரம் அதிகரித்தாலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் ஊரடங்குகளை தளர்த்தி மக்களுக்காக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடைகள் அனைத்தையும் திறக்க அனுமதித்து  இருந்தாலும் கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி செல்ல வேண்டும் என்பது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளில் ஒன்றாக கூறப்பட்டுள்ளது. ஆனால் பலர் இது குறித்து கவலை இன்றி மாஸ்க் அணியாமல் சென்று, கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர், அல்லது தங்களிடமுள்ள கொரோனாவை பிறருக்கு பரப்புகின்றனர்.
இந்நிலையில், இந்தியா முழுவதிலும் கொரோன தடுப்பு நடவடிக்கையாக மாஸ்க் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு 200 முதல் 500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் சிங்கப்பூரில் அவ்வாறு கிடையா. மாஸ்க் அணியாதவர்கள் உடனடியாக கைது தான். சிங்கப்பூரில் உள்ள வணிக வளாகத்தில் மாஸ்க் அணியாமல் சென்ற இளம்பெண் ஒருவர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரால் மாஸ்க் அணிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டாள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்