‘நிதியும் இல்லை’ ‘டெண்டரும் இல்லை’ “தமிழகத்துக்கு எய்ம்ஸ் சந்தேகம்” மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் ஆர்டிஐ மூலம் தகவல் பெறப்பட்டுள்ளது இதுவரை எந்த நிதியும் ஒதுக்கீடும் செய்யவில்லை.அது மட்டுமில்லாமல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2014ல் மோடி ஆட்சி பிரதமராக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் புதியதாக 13 எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி ஒவ்வொரு பட்ஜெட்டிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும், அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 2014- 15 பட்ஜெட் துவங்கி 2018-19 வரை எய்ம்ஸ் மருத்துவமனை இடம்பெற்றிருந்தது. ஆனால் இதுவரை ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை கூட முழுமையாக அமைக்கப்பட வில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் மோடி அரசு தோல்வியை தழுவியிருப்பது தெரிய வந்திருக்கிறது.
ஏற்கனவே இந்தியா டூடே பத்திரிகை இது குறித்து ஒரு செய்தியை வெளியீட்டு இருந்தது.அதில் இந்தியாவில் அமைக்கப்படும் என்று கூறிய 13 எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எவ்வித நிதியும் ஒதுக்க வில்லை என்று தகவல் தெரிவித்தது.இது அரசியலில் பெரிய அதிர்வலையை உண்டாக்கியது.இந்நிலையில் அதை உண்மையாகும் விதமாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியீட்ட தகவலின் படி தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை; எந்த நிறுவனத்திற்கும் டெண்டர் விடவும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போதுதான் மதுரை அருகே உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடமே தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவமனை ரூ 1500 கோடியில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. திட்டம் அறிவித்து 4 ஆண்டுகள் கடந்த நிலையிலே தற்போதுதான் இடமே முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவமனை செயல்பாட்டிற்கு வரும் காலம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதுவரை எந்த நிதியும் ஒதுக்கீடும் செய்யவில்லை.அது மட்டுமில்லாமல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் ஆர்டிஐ மூலம் தகவல் பெறப்பட்டுள்ளது.
இது மதுரையை சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையின் ஹக்கிம் பெற்ற தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட தகவலில் கிடைத்த தகவலாக சொல்கிறாரார்.இது தமிழக மக்களுக்கு மோடி அரசு செய்யும் துரோகம் எனவும் அவர் தெரிவித்தார்.
DINASUVADU