கல்யாணமும் வேண்டாம், குழந்தையும் வேண்டாம்.! ஆண்களை உதறித்தள்ளி சிங்களாகவே இருக்க விரும்பும் பெண்கள்.!

Default Image
  • தென் கொரிய பெண்கள், கல்யாணம், செக்ஸ் வாழ்க்கை, குழந்தை என எதுவும் வேண்டாம். சிங்கிள்ஸ் வாழ்க்கை முறையே மகிழ்ச்சியாக  இருக்கிறது என்று முடிவுக்கு வந்துள்ளனர்.
  • அங்கு ஆணாதிக்கம், பெண் அடிமைத்தனம் போன்றவற்றுக்கு எல்லாம் அடித்தளம் அமைத்துத் தரும் கல்யாணத்தை வெறுப்பதாக அந்நாட்டு பெண்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

வெளிநாடுகளில் ஆணும், பெண்ணும் திருமணம் ஆகாமல் ஒன்றாக வாழ்ந்து வருவது அங்கு வழக்கமான முறையாக மாறியது. பின்னர் அந்த லிவிங் டுகெதர் சில இடங்களில் பரவத் தொடங்கி நடந்து வருகிறது. அதில் சில நாடுகள் இது நாட்டின் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் என்று எதிர்ப்புகள் வந்தது. அதைத்தொடர்ந்து ஆண்கள் சமீப காலமாக சிங்கள் தான் நல்லது எனவும், சிங்கிளா இருந்த தான் எந்த விளைவும் இல்லாமல் கெத்தாக இருக்கலாம் என்று கூறி வருகிறார்கள். அந்த வகையில், தென் கொரிய பெண்கள், கல்யாணம், செக்ஸ் வாழ்க்கை, குழந்தை என எதுவும் வேண்டாம். சிங்கிள்ஸ் வாழ்க்கை முறையே மகிழ்ச்சியாக  இருக்கிறது என்று முடிவுக்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில், உலகளவில் கருவுறுதல் விகிதம் மிகவும் குறைந்த நாடாக தென்கொரியா உள்ளது. அங்கு ஆணாதிக்கம், பெண் அடிமைத்தனம் போன்றவற்றுக்கு எல்லாம் அடித்தளம் அமைத்துத் தரும் கல்யாணத்தை வெறுப்பதாக அந்நாட்டு பெண்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அதில் ’No Marriage’ இயக்கத்தை முதன்முதலில் இரண்டு பெண்கள் தங்களது SOLOdarity என்ற யூட்யூப் தளத்தில் மூலம் அறிமுகம் செய்தனர். இதில் சில மாதங்களிலேயே இந்த இயக்கத்தின் கீழ் 37,000க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்தனர். இந்த இயக்கத்தின் மூலம் ஆண்கள், திருமணம், செக்ஸ், குழந்தைகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கலாம் என சக பெண்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்படுகிறது. இதற்கு பெண்கள் மத்தியில் பெரிய ஆதரவும் கிடைத்து வருகிறது என்று கூறப்படுகிறது. மேலும் SOLOdarity சேனலின், ஜங் மற்றும் அவரது இணை தொகுப்பாளரான பேக் ஹா-நா, ஆவார்.


மேலும், ஐநா அறிக்கையின் அடிப்படையில் தென்கொரியாவில் மக்கள் தொகை மிக வேகமாக குறைந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையாக அந்நாட்டு அரசு பாலின சமத்துவத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அதை தொடங்கியுள்ளதாம். தற்போது தென்கொரிய பெண்களில் வெறும் 44 சதவிகிதத்தினர் மட்டுமே திருமண ஆசை உள்ளவர்களாக இருப்பதாக அந்நாட்டு அரசின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்