இந்த 1 வரி மந்திரத்தை உச்சரித்தால் போதும் எந்த ஆபத்தும் நம்மை நெருங்காது..!

நாம் சரியாக இருந்தாலும் சில நேரங்களில் நமது நேரம் சரியாக இருக்காது. நாம் சாலை விதிகளை கடைபிடித்து சென்றாலும் எதிரே வரும் வாகனம் அதேபோல் வரும் என்று சொல்லிவிட முடியாது. அதனால் எந்த நேரத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற பயத்திலேயே வாழ்க்கையில் அடுத்த அடிகளை வைக்க முடியாது. எல்லா நேரங்களிலும் நம்மை காக்க இந்த ஒரு வரி மந்திரம் போதும். முதலில் இந்த 1 வரி மந்திரத்திற்கு சக்தி அளிக்க வேண்டும். அதனால் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து பூஜை அறையில் விளக்கேற்றி அமர்ந்து 1008 முறை இந்த மந்திரத்தை வாயால் உச்சரிக்க வேண்டும். இதனால் இந்த மந்திரம் சக்தி அடையும். பின்னர் தினமும் நீங்கள் காலை எழுந்தவுடன் 3 முறையோ அல்லது 11 முறையோ என ஒற்றைப்படை கணக்கில் உச்சரித்து கொள்ளலாம். இந்த 1 வரி மந்திரம் இதோ:
ஓம் ஜூம் சக, சக ஜூம் ஓம்.
இந்த மந்திரத்தை நீங்கள் வெளியே செல்லும் முன், உங்களது வாகனத்தை எடுக்கும் முன், அல்லது நெடுந்தூர பயணம் மேற்கொள்ளும் முன் என எப்போது வேண்டுமானாலும் உச்சரிக்கலாம். உச்சரித்த பின்னர் உங்களை சுற்றி ஒரு பாதுகாப்பு வட்டம் ஏற்பட்டுவிடும். இது உங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும். இது ஏதேனும் ஆபத்து ஏற்பட்டாலும் உங்களுக்கு அவ்விடத்தில் சரியான வழியை ஏற்படுத்தும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025
12ஆம் வகுப்பு தேர்வு : பறக்கும் படை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள்.., பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
March 3, 2025
2025 ஆஸ்கார் விருதுகள்! 5 விருதுகளை தட்டி தூக்கிய அனோரா!
March 3, 2025