இனி இந்த நாட்டுக்கு விசா இல்லாமல் செல்லாமல்..!எந்த நாடு தெரியுமா..?
பிரேசிலில் ஜனாதிபதியாக இந்த ஆண்டு பதவியேற்றவர் ஜாய்ர் போல்சோனாரா.
இவர் பதவியேற்ற சில மாதங்களிலேயே விசா நடைமுறையில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து உள்ளார்.
அதாவது வளர்ந்து வரும் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா நடைமுறை எளிதாக்கி உள்ளார். அதன்படி அமெரிக்கா , ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை சார்ந்த தொழில் அதிபர்கள் , சுற்றுலா பயணிகளுக்கு பிரேசில் வர விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டது.
தற்போது பிரேசிலுக்கு வரும் இந்தியா மற்றும் சீனா தொழிலதிபர்களுக்கும் , சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவை இல்லை என அறிவித்தார். பல்வேறு நாடுகளுக்கு விசா சலுகை அழிப்பதன் மூலம் தங்கள் நாட்டின் சுற்றுலாத் துறை மேம்படும் முடியும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு 6 மில்லியன் சுற்றுலா பயணிகள் பிரேசிலுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.