இந்த கொரோனா வைரஸால், உலக அளவில், 7,452,809 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 418,919 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் இந்த கொரோனா வைராஸ் பாதிப்பால், உலக அளவில் 5,165 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக 134,705 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
1. நியூசிலாந்து
நியூசிலாந்து நாட்டு கொரோனா இல்லாத நாடக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் கொரோனா தொற்று ஏற்பட்டதற்கு பின், அங்கு பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனையடுத்து, அங்கு இந்த வைரஸை தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்ட பின், ஜூன் 8-லிருந்து எந்த கொரோனா பாதிப்பும் பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில், நியூசிலாந்தில், 1,504 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, தற்போது நியூசிலாந்து கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கொரோனா பாதிப்புகள் மீண்டும் ஏற்படாமலிருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்காக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. தான்சானியா
Tanzania- நாட்டின் ஜனாதிபதி தனது நாடு பிரார்த்தனையின் காரணமாக கொரோனா வைரஸிலிருந்து விடுபட்டதாகக் கூறினார். இருந்தாலும், நம் நாட்டில் கொரோனா கடவுளின் சக்திகளால் நீங்கியுள்ளது என்று ஜனாதிபதி ஜான் மகுஃபுலி ஞாயிற்றுக்கிழமை தேவாலய சேவையில் அறிவித்தார்.
தான்சானியாவின் 509 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 183 பேர் குணமடைந்துள்ள நிலையில் 9 பேர் உயர்ந்துள்ளனர்.
3. வத்திக்கான்
Vatican- நாட்டில் ஜூன் 6-ம் தேதி அங்கு 12 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த 12 நோயாளிகளும் குணமடைந்த பின்னர் எந்தவித கொரோனாவும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்மையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள கடைசி நபர் எதிர்மறையை பரிசோதித்தார். இதுவரை எந்த மரணமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.பிஜி
Fiji-நாட்டில் ஜூன் முதல் வாரத்தில் கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 பேரும் மீண்டுவிட்டனர். மேலும், இதுவரை ஒருவர் கூட கொரோனாவுக்கு பலியாகவில்லை.
அந்த நாட்டிற்கு பெயர் ஃபிஜி தீவு ஆகும். உலகின் மிக சின்னசிறு நாடாக இந்த நாடு அறியப்படுகிறது. இந்நாட்டில் தான் தற்போது 100 சதவீதம் கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.900,000 மக்கள் தொகையைக் கொண்ட பிஜி, ஏப்ரல் மாதத்தில் சில பகுதிகளுக்கு பொதுமுடக்கம் விதித்து தற்போதுள்ள எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்தது.
5.மோன்டெனெக்ரோ
Montenegro- நாட்டில் கொரோனா தொற்று முதன்முதலில் அறிவிக்கப்பட்ட 69 நாட்கள் பிறகு மோன்டெனெக்ரோ நாடு கொரோனா வைரஸ் இல்லாத நாடு என்று மே-24 அன்று அறிவித்தது. அங்கு 324 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது .மேலும் கொரோனா தொற்றால் 9 பேர் உயிரிந்துள்ள நிலையில், 315 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்களாம். ஆனால் மே-24லிருந்து கொரோனா தொற்றை ஏற்படவில்லையாம்.
6.சீசெல்ஸ்
Seychelles-நாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் முழு மீட்டெடுப்புகளை அறிவித்த பின்னர் மே-18 ஆம் தேதி ஆரம்பத்தில் உள்ள கொரோனா வைரஸ் இல்லாத நாடாக மாறியது என அறிவித்துள்ளது.இங்கு கொரோனா தோற்று உறுதிப்படுத்தப்பட்ட 11 கேஸ்களும் தற்போது குணமடைந்துள்ளதாக கூறியுள்ளது. ஆனால் அங்கு ஒரு இறப்புகள் இல்லயாம்.
7.ஸ்டி கிட்ஸ் மற்றும் நெவிஸ்
St Kitts and Nevis- நாட்டில் மே-19 அன்று கொரோனா வைரஸ் இல்லாத நாடாக மாறியதாம். அதாவது 15 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அந்த 15 பெரும் குணமடைந்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் எந்தவித மரணமும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு அரசாங்கம் கூறியது.
8.திமோர்-லெஸ்டே
Timor-Leste -நாட்டில் மொத்தமாக 24 கொரோனா கேஸ் இருந்த நிலையில் அந்த 24 பெரும் குணமடைந்து மே-15 அன்று கொரோனவிலிருந்து மீண்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸால் எந்த மரணமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9.பப்புவா நியூ குனியா
apua New Guinea- நாட்டில் மே-4 அன்று கொரோனா வைரஸிலிருந்து மீண்டதாக அறிவித்துள்ளது. இதில் 24 பேர் கொரோனாவால் பாதித்திருந்த நிலையில் தற்போது எல்லாம் குணமடைந்து கொரோனா தொற்றை இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸால் இறப்பு ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…