பதவி தப்புமா? – இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல்!
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. பாகிஸ்தானின் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான்கானே ககாரணம் என எதிர்க்கட்சிகள் குற்றசாட்டியுள்ளனர். இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றம் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானின் ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் தீவிரம் கட்டி வரும் நிலையில், இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், நம்பிக்கையில்லா தீர்மானத்தால், அரசு கவிழும் நிலை உள்ளது. எனவே, இம்ரான் கானின் பதவி தப்புமா அல்லது விலகுவாரா என்பது குறித்து வரும் 31-ஆம் தேதி தெரியவரும் என கூறப்படுகிறது.