இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பாக். நாடாளுமன்றத்தில் வரும் 28ம் தேதி வாக்கெடுப்பு.
பாகிஸ்தானில் விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி மற்றும் உக்ரைன் மீது தாக்குதல் குறித்த நிலைப்பாடு உள்ளிட்ட குற்றசாட்டுகளை முன்வைத்து பிரதமர் இம்ரான் கானை ஆட்சியில் இருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் இம்ரான்கான் அரசு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படம் என கூறப்பட்டது.
இதனிடையே, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற உள்ளதால், உடனடியாக பதவி விலகுமாறு பிரதமர் இம்ரான்கானை அந்நாட்டு ராணுவம் வலியுறுத்தி உள்ளதாக கூறப்பட்டது. பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள் ஆளும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பரபரப்பான சூழலில் இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், வரும் 28-ஆம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளனர்.
எனவே, இன்று கூடிய நாடாளுமன்ற கூட்டத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடைபெற்றது. பெரும்பான்மையை இழந்துள்ளதால் இம்ரான்கான் அரசு கவிழும் நிலை உருவாகியுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…
சென்னை : சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக…