இனி பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்பில்லை – WHO எச்சரிக்கை!

எதிர்காலத்தில் பழைய இயல்பான நிலைக்கு திரும்ப முடியாமலே போய் விடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், தற்பொழுது அமெரிக்கவிலும் மேலும் தாக்கங்கள் துவங்கியுள்ளது. இதனை எச்சரித்த உலக சுகாதார அமைப்பினர் இதனை எதிர்கொள்ளாவிட்டால் உலகளவில் அதிக பாதிப்புகளை சந்திக்கக்கூடும் என கூறியுள்ளனர்.
மேலும், பல நாடுகளிலும் வைரஸின் தீவிரம் அதிகரித்து வருவதால் இனி வரும் கலன்களில் நாம் இயல்பு நிலைக்கு திரும்பவே முடியாது என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளர். புதிதாக கண்டறியப்படும் பதிப்புகளில் பாதிக்கு பத்தி அமெரிக்காவை சார்ந்ததாக உள்ளது எனவும், புளோரிடாவும் வைரஸ் பரவுதலுக்கு வாழ்வாக்குகிறது எனவும் கூறிய அவர், இனி நாம் இந்த வைரஸை கட்டுக்குள் கொண்டு வர ஒரு வழி அடிப்படை விதிகளை பின்பற்றுவது தான் என கூறியுள்ளார்.