கட்சிக்கோ, ஆட்சிக்கோ எதிராக எந்த செயலிலும் ஈடுபடவில்லை-எம்எல்ஏ ரத்தினசபாபதி
கட்சிக்கோ, ஆட்சிக்கோ எதிராக எந்த செயலிலும் ஈடுபடவில்லை என்று எம்எல்ஏ ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதை விசாரித்த உச்சநீதிமன்றம் 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இது தொடர்பாக எம்எல்ஏ ரத்தினசபாபதி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,நாங்கள் ஆட்சிக்கு உறுதுணையாக தான் இருந்திருக்கிறோமே தவிர, கட்சிக்கோ, ஆட்சிக்கோ எதிராக எந்த செயலிலும் ஈடுபடவில்லை. எங்கள் மீது இந்த ஆட்சிக்கும், சபாநாயகருக்கும் உள்நோக்கம் இருந்தது.ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு பதவி கொடுத்தனர்.தர்மம், நீதி வென்றது என்று சொல்லக் கூடிய வகையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று எம்எல்ஏ ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார்.