என்னை இந்தியாவிற்கு நாடு கடத்தினால் தற்கொலை செய்துகொள்வேன்- நீதிமன்றத்தில் நிரவ் மோடி மிரட்டல்

Published by
Venu
என்னை இந்தியாவிற்கு நாடு கடத்தினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று நிரவ் மோடி  நீதிமன்றத்தில் மிரட்டல் விடுத்துள்ளார்.
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்து விட்டு  கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர். நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடியது.
பின்பு  நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை சர்வதேச போலீசாரும் பிறப்பித்தனர். இந்த வழக்கில் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியை கைது செய்ய  வாரண்ட் ஒன்றை பிறப்பித்தது.இதனை தொடர்ந்து லண்டன் போலீசார் நிரவ் மோடியை கைது செய்தது.வங்கி கடன் மோசடியில் சிக்கி லண்டன் சிறையில் உள்ளார் நிரவ் மோடி.
சிறையில் உள்ள நிரவ் மோடி பலமுறை தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.அப்பொழுது நிரவ் மோடி வெஸ்ட்மின்ஸ்டர் (Westminster) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சிறையில் வைத்து பலமுறை  நான் பலமுறை தாக்கப்பட்டுள்ளேன் என்று கூறினார்.மேலும் இந்தியாவிற்கு நாடு கடத்தினால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார்.இறுதியாக நீதிமன்றம் நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.மேலும் வழக்கின் விசாரணையை டிசம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Published by
Venu

Recent Posts

“செங்கோட்டையன் விசுவாசமானவர்.. இதை செய்தால் தான் அதிமுகவுக்கு வாழ்வு” – ஓ.பன்னீர்செல்வம்.!

“செங்கோட்டையன் விசுவாசமானவர்.. இதை செய்தால் தான் அதிமுகவுக்கு வாழ்வு” – ஓ.பன்னீர்செல்வம்.!

தேனி : அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு…

24 minutes ago

விரைவில் எம்பி-யாகும் கமல்ஹாசன்? துணை முதல்வருடன் ‘திடீர்’ சந்திப்பு!

சென்னை : மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு (மநீம), ஒரு மாநிலங்களவை உறுப்பினர்…

1 hour ago

டிராவிட், கும்ப்ளே, கோலி வரிசையில் ரஜத் படிதார்! ரசிகர்கள் சற்று அதிருப்தி!

பெங்களூரு : இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ஐபிஎல் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் யார் என்று அறிவிக்கப்படுவார்…

1 hour ago

இந்தியாவுக்கு சவால் விட்ட இங்கிலாந்து வீரர்..”இப்படியெல்லாம் பேசக்கூடாது”..கெவின் பீட்டர்சன் பதிலடி!

டெல்லி : இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சமீபத்தில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என சவால் விடும் வகையில் பேசியது சர்ச்சையாக…

2 hours ago

அதிமுகவில் உட்கட்சி பூசல்? எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறு உருவம் இபிஎஸ்! முன்னாள் அமைச்சர் பேச்சு..,

சென்னை : அதிமுகவிற்குள் தற்போது என்ன நடக்கிறது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே…

3 hours ago

பெங்களூர் அணியின் புதிய கேப்டன் ரஜத் படிதார்! வேதனையில் விராட் கோலி ரசிகர்கள்!

பெங்களூர் : இந்த ஆண்டுக்கான (2025) ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21-ஆம் தேதி முதல் மே 25 வரை நடைபெறவுள்ளது.…

3 hours ago