லண்டன்: ஒரு பெரிய ஆய்வில், நைட் ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கு கடுமையான ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து, தோராக்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, வளர்ந்த நாடுகளில் ஐந்து ஊழியர்களில் ஒருவர் நிரந்தர அல்லது சுழலும் நைட் ஷிப்டுகளில் பணிபுரிகிறார்.
இந்த தவறான வடிவமைப்பால் பல்வேறு வளர்சிதை மாற்றக் கோளாறுகள், இருதய நோய் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றிக்கு வழிவகுக்கும் என்று இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
ஆஸ்துமா அறிகுறிகள்:
மூச்சுத்திணறல் மற்றும் பகல் அல்லது இரவு நேரத்திற்கு ஏற்ப கணிசமாக வேறுபடுகின்றன. மேலும், ஆஸ்துமா அல்லது அதன் தீவிரத்தன்மையின் அதிக ஆபத்துடன் ஷிப்ட் வேலையும் தொடர்புபடுத்தப்படுமா என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்க விரும்பினர்.
இதற்காக, ஆய்வு செய்யும் தன்னாலவர்கள் 37 முதல் 72 வயதுக்குட்பட்டவர்கள்.
இதில், பெரும்பாலானவர்கள் (83 சதவீதம்) வழக்கமான அலுவலக நேரங்களை வேலை செய்தனர். அதே நேரத்தில் 17 சதவீதம் பேர் ஷிப்டுகளில் பணிபுரிந்தனர், அதில் பாதி (51 சதவீதம்) இரவு ஷிப்டுகளும் அடங்கும்.
ஷிப்ட் வடிவங்கள்: அவ்வப்போது இரவு ஷிப்டுகள், ஒழுங்கற்ற அல்லது சுழலும் இரவு ஷிப்டுகள் மற்றும் நிரந்தர இரவு ஷிப்டுகள் ஆகும்.
பணிபுரியும் அலுவலக நேரங்களுடன் ஒப்பிடுகையில், ஷிப்ட் பணியாளர்களில் “ஆண்கள்” புகைப்பிடிப்பவர்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிப்பவர்கள். அவர்களில் குறைந்த ஆல்கஹால் குடித்துக்கொண்டு குறைந்த மணிநேரம் தூங்கினார்கள், ஆனால், அதிக நேரம் வேலை செய்தார்கள்.
இந்நிலையில், ஆய்வில் பங்கேற்றவர்களில் 14,238 பேருக்கு சுமார் ஐந்து சதவீதம் ஆஸ்துமா இருந்தது. மேலும், 4,783 பேரில் கிட்டத்தட்ட இரண்டு சதவீதம் அறிகுறிகள் காணப்பட்டது.
ஆஸ்துமா அறிகுறிகளை கண்டறிய ஆய்வாளர்கள் அலுவலக நேரங்களை மற்ற வேலைகளுடன் ஒப்பிட்டனர். சாதாரண அலுவலக நேரங்களுடன் ஒப்பிடும்போது நிரந்தர இரவு ஷிப்ட் தொழிலாளர்களில் மிதமான மற்றும் கடுமையான ஆஸ்துமா இருப்பதில் 36 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேபோல், மூன்று ஷிப்ட் முறைகளில் ஏதேனும் வேலை செய்பவர்களிடையே மூச்சுத்திணறல் 11-18 சதவீதம் அதிகமாக இருந்தன, அதே நேரத்தில் ஷிப்ட் தொழிலாளர்களில் 20 சதவிகிதம் அதிகமாக இருந்தது தெரிய வந்துள்ளது.
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி…
சென்னை: சென்னையில் 2025-ஐ வரவேற்க தயாரான மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை மணிக்கூண்டு பூக்கள், வண்ண…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை…
மணிப்பூர்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறை நடந்து வருகிறது. இதில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர்…
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி (STANDUP COMEDY) என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத்…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு கடற்கரை சாலையில் நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள்…