21 கொள்ளையர்களை கொன்று புதைத்த நைஜீரியா பாதுகாப்பு படை !

நைஜீரியா, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நாடுகளில் ஒன்றாகும். போகோஹரம், ஐ.எஸ், உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் அங்குள்ள மக்களை துன்புறுத்தி பணம், பொருள் ஆகியவற்றை கொள்ளையடித்து வருகின்றனர். இதில் முக்கியமான பன்டிட்ஸ் என்ற கொள்ளை கும்பலை நைஜீரியா பாதுகாப்பு படையினர் அழிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், சுர்மி நகரின் ஹடரின் டஜி பகுதியில் தங்கியிருந்த பன்டிட்ஸ் கொள்ளை கும்பலை நைஜீரியா பாதுகாப்பு படையினர் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தி 21 கொள்ளையர்களை கொன்றுள்ளனர். இந்த தாக்குதலில் 4 பாதுகாப்பு படையினரும் உயிரிழந்துள்ளனர்.