விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இடம்பெற்றுள்ள முருகா என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்களில் ஒன்று யாதும் ஊரே யாவரும் கேளிர். இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார் .மேலும் இந்த படத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி, விவேக், இயக்குநர் மோகன்ராஜா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே படப்பிடிப்பை முடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டதுடன்,யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டீசர் கடந்த 4 ஆம் தேதி வெளியானது.
இந்த அப்டேட்டை தொடர்ந்து ரசிகர்களுக்கு அடுத்த அப்டேட் கொடுக்கும் வகையில் படத்திற்கான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை படக்குழு வெளியீடவுள்ளனர். ஆம் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தில் இடம்பெற்றுள்ள முருகா என்ற பாடல் வெளியாகவுள்ளது. இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…