சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் OTT தளத்தில் வருகிற அக்டோபர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இதனைத்தொடர்ந்து மற்ற பெரிய நடிகர்களின் படத்திற்கும் OTT தளங்கள் விலைபேசி வருகின்றனவாம்.
அதன்படி, தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் OTT தளங்கள் விலைபேசி வருகின்றனவாம்.
அடுத்து, ஜெயம் ரவியின் 25வது படமான பூமி படத்தை சன் நெக்ஸ்ட் OTT தளம் வாங்கியுள்ளதாம். கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படங்களான ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள டெடி மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள காட்டேரி ஆகிய படங்களை அமேசான் நிறுவனம் விலை பேசி வருகிறதாம்.
கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரித்து வரும் படங்களான கா/பெ ரணசிங்கம் மற்றும் சந்தானம் மூன்று வேடத்தில் நடித்துள்ள டிக்கிலோனா ஆகிய திரைப்படங்களை ஜி-5 OTT தளம் விலை பேசி வருகிறதாம்.
சூரரைப்போற்று படத்தை தொடர்ந்து இன்னும் சில (பெரிய ஹீரோ படங்கள் கூட ) படங்கள் OTT தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…