ஷாருக்கானை இயக்கபோவது வெற்றிமாறனா? அட்லீயா?

ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஸீரோ. இந்த படம் வெளியாகி ஓராண்டு ஆக உள்ள நிலையிலும் ஷாருக்கான் அடுத்தப்பட அறிவிப்பை வெளியிடாமல் உள்ளார். ஸீரோ படம் தோல்வியடைந்ததால் அடுத்தப்படத்தை வெற்றிப்படமாக்க பல கதைகள் கேட்டு வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் அட்லீ ஷாரூக்கானிடம் ஒரு கதை கூறியுள்ளதாகவும், அந்த கதைக்கு ஷாருக் ஓகே சொல்லிவிட்டதாகவும் படத்திற்கு சங்கி என பெயர் வைத்ததாகவும் தகவல் வெளியாகின. ஆனால் அது குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தை ஷாருக் பார்த்துள்ளார். அது மிகவும் பிடித்து போக வெற்றிமாறனை அழைத்து பாராட்டியுள்ளார். மேலும், ஷாருக்கானின் பிறந்தநாள் விருந்திற்கு வெற்றிமாறன் அழைக்கப்பட்டிருந்தார். இயக்குனர் அட்லீயும் அழைக்கப்பட்டிருந்தார்.
அதனால் ஷாருக் அடுத்து நடிக்க போவது அட்லீ இயக்கத்தில் சங்கி திரைப்படமா? இல்லை வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் பாலிவுட் ரீமேக்கா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025