அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர் தம்பி விஜய்சேதுபதி – கமல்ஹாசன்!
அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர் தம்பி விஜய்சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என நடிகர் கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த நாளுக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமாகிய கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலைக் கொண்டவர் தம்பி விஜய் சேதுபதி. கதையின் நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர். அவரது தேடலும் துணிச்சலும் வீண்போகாது. தம்பி விஜய்சேதுபதிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலைக் கொண்டவர் தம்பி @VijaySethuOffl . கதையின் நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர். அவரது தேடலும் துணிச்சலும் வீண்போகாது. தம்பி விஜய்சேதுபதிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். pic.twitter.com/gSpnjtnHYM
— Kamal Haasan (@ikamalhaasan) January 16, 2022