வரும் வெள்ளிக்கிழமை அன்று விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்யா வர்மா திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படம் தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
அடுத்ததாக அடுத்த வாரம் நவம்பர் 29ஆம் தேதி தனுஷ் நடிப்பில் வெகு நாட்களாக கிடப்பில் இருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீசாக உள்ளது. அதே நாளில், சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை, மற்றும் பிக் பாஸ் ஆரவ் நடித்துள்ள மார்க்கெட் ராஜா படமும் வெளியாக உள்ளது.
அடுத்ததாக டிசம்பர் 6ஆம் தேதி கதிர் நடிப்பில் கால்பந்தாட்டத்தில் மையமாக வைத்து உருவாகியுள்ள ஜடா திரைப்படமும், இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படமும், இயக்குனர் சுந்தர்.சி நடித்துள்ள பேய் படமான இருட்டு திரைப்படமும் வெளியாக உள்ளது. அடுத்து, விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியுள்ள கேப்மாரி படமும் ரிலீசாக .உள்ளது.
அதற்கு அடுத்து டிசம்பர் 20ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு 4 நேரடி தமிழ்ப் படங்களும் ஒரு டப்பிங் திரைப்படம் வெளியாக உள்ளது. முதலில் இருப்பது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ திரைப்படம், அடுத்தது கார்த்தி நடிப்பில் பாபநாசம் இயக்குனர் இயக்கியுள்ள தம்பி திரைப்படம், அடுத்தது ஜீவா நடித்துள்ள சீறு திரைப்படம், நான்காவதாக ஜீவி பிரகாஷ் குமார் -எழில் கூட்டணியில் உருவாகியுள்ள ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படம். இதுபோக பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள தபாங் 3 திரைப்படமும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…