தடுப்பூசி போட்டால் 36 கோடி லாட்டரி பரிசு….நியூயார்க் அரசு அதிரடி அறிவிப்பு…
நியூயார்க்கில் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க…லாட்டரி டிக்கெட் அறிவிப்பு மூலம் அரசு புதிய முயற்சி.
உலகம் முழுவதும் கொரோனா காட்டுத்தீ போல் பரவி வரும் நிலையில் உயிரிழப்புகளைத் தடுக்க தடுப்பூசி போடுவது மட்டுமே ஒரு சிறந்த கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக உலக நாடுகளால் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மக்கள் கொரோனா தடுப்பூசி பற்றிய தவறான புரிதலால் தடுப்பூசி போட மருக்கின்றனர். இதனை சரிசெய்வதற்கு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றது.
இதனையடுத்து வியாழக்கிழமையன்று நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கூமோ ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார், அதில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் நியூயார்க்கர்களுக்கு 5 மில்லியன் டாலர் லாட்டரி பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் மே 24 முதல் மே 28 வரை “வாக்ஸ் & ஸ்க்ராட்ச்” திட்டம் மூலம் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் பெறும் நியூயார்க்கர்கள் இலவச மாநில லாட்டரி- ஸ்க்ராட்ச் ஆப் டிக்கெட்ஸ் பெறுவார்கள் என்று அறிவித்துள்ளார். மேலும் நியூயார்க்கில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் குறைந்து வருவதால் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூமோ தெரிவித்துள்ளார்.