ட்வீட்டர் நிறுவனம் தனது தளத்தில் பேமெண்ட் வசதிகளை வழங்குவதற்காக டிப் ஜார் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ட்வீட்டர் நிறுவனம் தனது தளத்தில் பேமெண்ட் வசதிகளை வழங்குவதற்காக டிப் ஜார் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்போது தொண்டு நிறுவனங்கள், செய்தியாளர்கள் மற்றும் கிரியேட்டர்ஸ் என மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் வழங்கப்பட்டு வருகிறது.
இது தவிர, ட்வீட்டர் நிறுவனம், இந்திய பேமண்ட் நிறுவனங்களுடன் டிப் ஜார் வசதியை வழங்குவதற்காக பணியாற்றி வருகிறது. இந்த சேவையை ஆங்கிலம் மட்டுமின்றி மேலும் சில மொழிகளில் ட்விட்டர் நிறுவனம் வழங்க இருக்கிறது. தற்போது Bandcamp, CashApp, Patreon, Paypal மற்றும் Venmo போன்ற பண பரிமாற்ற தளங்களுக்கான ஆதரவை மட்டுமே ட்வீட்டர் வழங்குகிறது.
ட்விட்டர் நிறுவனம் வழங்கியுள்ள இந்த பேமெண்ட் வசதியை கொண்டு ஒருவரின் ப்ரொபைலில் இருக்கும் டிப் ஜார் ஐகானை கொண்டு மற்றவர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை ட்வீட்டர் நிறுவனம் மே 6-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து மூத்த தயாரிப்பு மேலாளர் எஸ்தர் கிராஃபோர்ட் கூறுகையில், டுவிட்டரில் தனிப்பயனாக்கம் மற்றும் பின்தொடர்தல் போன்ற செயல் முறைகளோடு மற்றவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலம் மற்றவர்க்களுக்கு வழங்கப்படும் பணத்தில் ட்வீட்டர் நிறுவனத்திற்கு எந்த ஒரு பங்கும் கிடையாது. இந்த அம்சம் விரைவில் அதிகமானவர்களுக்கு கிடைப்பதற்கான வழிவகை செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…