ட்வீட்டரில் புதியதாக அறிமுகமாகியுள்ள ‘டிப் ஜார்’….! இதன் சிறப்பம்சம் என்ன….?

Default Image

ட்வீட்டர் நிறுவனம் தனது தளத்தில் பேமெண்ட் வசதிகளை வழங்குவதற்காக டிப் ஜார் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ட்வீட்டர் நிறுவனம் தனது தளத்தில் பேமெண்ட் வசதிகளை வழங்குவதற்காக டிப் ஜார் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்போது தொண்டு நிறுவனங்கள், செய்தியாளர்கள் மற்றும் கிரியேட்டர்ஸ் என மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் வழங்கப்பட்டு வருகிறது.

இது தவிர, ட்வீட்டர் நிறுவனம், இந்திய பேமண்ட் நிறுவனங்களுடன் டிப் ஜார் வசதியை வழங்குவதற்காக பணியாற்றி வருகிறது. இந்த சேவையை ஆங்கிலம் மட்டுமின்றி மேலும் சில மொழிகளில் ட்விட்டர் நிறுவனம் வழங்க இருக்கிறது. தற்போது  Bandcamp, CashApp, Patreon, Paypal மற்றும் Venmo போன்ற பண பரிமாற்ற தளங்களுக்கான ஆதரவை மட்டுமே ட்வீட்டர் வழங்குகிறது.

ட்விட்டர் நிறுவனம் வழங்கியுள்ள இந்த பேமெண்ட் வசதியை கொண்டு ஒருவரின் ப்ரொபைலில் இருக்கும் டிப் ஜார் ஐகானை கொண்டு மற்றவர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை ட்வீட்டர் நிறுவனம் மே 6-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து மூத்த தயாரிப்பு மேலாளர் எஸ்தர் கிராஃபோர்ட் கூறுகையில், டுவிட்டரில் தனிப்பயனாக்கம் மற்றும் பின்தொடர்தல் போன்ற செயல் முறைகளோடு மற்றவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலம் மற்றவர்க்களுக்கு வழங்கப்படும் பணத்தில் ட்வீட்டர் நிறுவனத்திற்கு எந்த ஒரு பங்கும் கிடையாது. இந்த அம்சம் விரைவில் அதிகமானவர்களுக்கு கிடைப்பதற்கான வழிவகை செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்