விமான குப்பைத்தொட்டியில் கிடந்த பிறந்த குழந்தை..!

மொரிஷியஸ் ஏர்பஸ் விமானத்தின் குப்பைத் தொட்டியில் டாய்லெட் பேப்பரால் மூடப்பட்டு கிடந்த பிறந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பட்டது.
கடந்த ஜனவரி 1 சனிக்கிழமை அன்று ஏர் மொரீஷியஸ் ஏர்பஸ் ஏ330-900 ரக விமானத்தின் குப்பைத் தொட்டியில் டாய்லெட் பேப்பரில் புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று இருந்துள்ளது. வழக்கமான சுங்கச் சோதனையின் போது விமானத்தை சோதனை செய்த விமான நிலைய அதிகாரிகள் குழந்தையை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.
குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே, விமானத்தில் பிரசவித்ததாக சந்தேகிக்கப்படும் மடகாஸ்கரைச் சேர்ந்த 20 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது உறுதி செய்யப்பட்டது. அவர் மருத்துவமனையில் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.