சதம் விளாசிய கேன் வில்லியம்சன்!புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்த நியூசிலாந்து!
நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி , தென்னாப்பிரிக்கா அணி மோதியது. இப்போட்டியானது பர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
முதலில் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஹாஷிம் அம்லா, குயின்டன் டி கோக் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே குயின்டன் டி கோக் 5 ரன்னில் வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் , ஹாஷிம் அம்லா இருவரும் இணைந்து அணியின் ரன்களை சற்று உயர்த்தினார். டு பிளெஸ்ஸிஸ் 14 ஓவரில் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.அதன் பின்னர் நிதானமாக விளையாடிய ஹாஷிம் அம்லா அரைசதத்தை நிறைவு செய்து 55 ரன்களுடன் வெளியேறினார்.
அடுத்ததாக மத்தியில் களமிறங்கிய ஐடன் மார்க்ராம் 38, ரன்களுடன் அவுட் ஆனார்கள். இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 49 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 241 ரன்கள் எடுத்தனர்.தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக ரஸ்ஸி வான் டெர் டுசென் 67 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து அணி பந்து வீச்சில் லாக்கி பெர்குசன் 3 விக்கெட்டை பறித்தார்.மேலும் மைதானம் ஈரப்பதம் காரணமாக 49 ஓவர்கள் மட்டுமே வைத்து போட்டி நடத்தப்பட்டது.
242 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்டில், கொலின் மன்ரோ இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே 9 ரன்கள் எடுத்து கொலின் மன்ரோ வெளியேறினார். பிறகு கேன் வில்லியம்சன் களம் இறங்கினார்.
பின்னர் மார்ட்டின் குப்டில், கேன் வில்லியம்சன் இருவரும் ரன்களை சற்று உயர்த்தினர். இந்நிலையில் 51-வது ஓவரில் 32 ரன்கள் எடுத்து மார்ட்டின் குப்டில் வெளியேறினார். நிதானமாக விளையாடிய கேன் வில்லியம்சன் சதம் விளாசினார்.
மத்தியில் இறங்கிய ரோஸ் டெய்லர், டாம் லாதம் இருவரும் 1 ரன்களில் அவுட் ஆனார்கள்.இறுதியாக நியூசிலாந்து அணி 48.3 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 245 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூட்டியது.தென்னாபிரிக்கா அணியில் கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டை வீழ்த்தினார்.