உலகக்கோப்பையில் அதிக சதம் அடித்த கேப்டன்கள் பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி நியூசிலாந்து முதலிடம் !
இதுவரை 11 உலகக்கோப்பை போட்டிகள் நடந்து முடித்த நிலையில் தற்போது 12-வது உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் 10 அணிகள் கலந்து கொண்டு இங்கிலாந்தில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இதுவரை உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அணிகளின் கேப்டன்கள் உலகக்கோப்பை போட்டியின் போது அடித்த மொத்த சதம் பட்டியலில் வெளியாகி உள்ளது.அப்பட்டியலில் நியூசிலாந்து அணி கேப்டன்கள் ஆறு சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளனர்.
நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி , தென்னாப்பிரிக்கா அணி மோதியது. இப்போட்டியானது பர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது இப்போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 138 பந்தில் 106 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் உலகக்கோப்பையில் அதிக சதம் அடித்த கேப்டன்களில் நியூசிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது.நியூசிலாந்து அணி கேப்டன்கள் அடித்த ஆறு சதங்களில் ஜி டர்னர் , எஸ் ஃப்ளெமிங் இருவரும் தலா 2சதங்கள் அடித்து உள்ளனர்.
G Turner (1975)
G Turner (1975)
M Crowe (1992)
S Fleming (2003)
S Fleming (2007)
K Williamson (2019)*
NZ – 6*
Aus – 6
Ind – 4
SL – 3
WI – 2
Eng – 2
Zim – 2
SA – 1
Pak – 1
Ire – 1