நியூசிலாந்து சூப்பர் மார்க்கெட் ஊழியர்களுக்கு கத்தி குத்து – 5 பேர் படுகாயம்!
நியூசிலாந்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த ஊழியர்களை கத்தியால் குத்தியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நியூசிலாந்து நாட்டில் உள்ள தெற்கு தீவின் தென்கிழக்குக் கடலோரப் பகுதியில் உள்ள டுனேடின் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சூப்பர் மார்க்கெட்டுக்குள் திடீரென புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களை திடீரென கத்தியால் குத்த தொடங்கியுள்ளார். இதில் 4 ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், உடனடியாக காவல் துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கத்தி குத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த 4 பேர் சூப்பர் மார்க்கெட்டின் ஊழியர்கள் எனவும், மேலும் ஒருவரும் காயம் அடைந்து இருப்பதால் அவர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் பொது மக்கள் அவரை பிடித்து கட்டி வைத்துள்ளதாகவும் காவலர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் போலீசார் அவரை விசாரித்து வருகின்றனர். இருப்பினும் காயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடத்தப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கத்திக்குத்துச் சம்பவம் எதற்காக நடைபெற்றது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.