தொடக்க வீரர்களின் சொதப்பலான ஆட்டம் ! பாகிஸ்தானுக்கு 238 ரன்கள் இலக்காக வைத்த நியூஸிலாந்து

இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது. இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டி டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.முதலில் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களான மார்டின் குப்தில் , கொலின் மன்ரோ இருவரும் களமிறங்க ஆட்டம் தொடக்கத்திலே மார்டின் குப்தில் 5 ரன்னில் வெளியேற பின்னர் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினர்.
அவர் இறங்கிய அடுத்த சில ஓவரில் கொலின் மன்ரோ 12 அவுட் ஆனார்கள்.அதன் பின்னர் இறங்கிய ரோஸ் டெய்லர் 3 ரன், டாம் லாதம் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
நிதானமாக விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சன் அணியின் ரன்னை உயர்த்தினர். 69 பந்தில் 41 ரன்கள் எடுத்து வெளியேறினார்.மத்தியில் களமிறங்கிய ஜேம்ஸ் நீஷம் , கொலின் டி கிராண்ட்ஹோம் இவர்களின் சிறப்பான கூட்டணியில் அணியின் ரன்கள் சதத்தை கண்டது.
சிறப்பாக விளையாடிய ஜேம்ஸ் நீஷம் , கொலின் டி கிராண்ட்ஹோம் இருவருமே அரைசதம் நிறைவு செய்தனர். இறுதியாக நியூஸிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 237 ரன்கள் சேர்த்தனர்.
நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜேம்ஸ் நீஷம் 97 ரன்கள் குவித்தார்.பாகிஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டை பறித்தார்.பாகிஸ்தான் அணி 238 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025