நியூசிலாந்து அணி 148 ரன்களை பாகிஸ்தானுக்கு இலக்காக நிர்ணயித்தது!
டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்தில் பயணம் செய்து வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் முத்தரப்பு டி-20 தொடரில் விளையாடி வருகிறது. வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வங்க தேசத்தை வென்றிருந்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி, இன்று பாகிஸ்தானை எதிர்த்து விளையாடி வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.
20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 8விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக டெவான் கான்வே(36), வில்லியம்சன்(31) மற்றும் மார்க் சாப்மேன் 32 ரன்களும் (16பந்துகளில்) எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் ராஃப் 3 விக்கெட்களும், மொஹம்மது நவாஸ் மற்றும் மொஹம்மது வாசிம் தலா 2 விக்கெட்களும் எடுத்துள்ளனர்.
148 ரன்கள் வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் அணி தற்போது களமிறங்கி விளையாடி வருகிறது.