முதல் முறையாக மண்ணை கவ்விய நியூசிலாந்து!வெளுத்து வாங்கிய பாகிஸ்தான் !
நேற்று நடந்த போட்டியில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டி டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களான மார்டின் குப்தில் , கொலின் மன்ரோ இருவரும் களமிறங்க ஆட்டம் தொடக்கத்திலே மார்டின் குப்தில் 5 ரன்னில் வெளியேற பின்னர் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினர்.
அவர் இறங்கிய அடுத்த சில ஓவரில் கொலின் மன்ரோ 12 அவுட் ஆனார்கள்.அதன் பின்னர் இறங்கிய ரோஸ் டெய்லர் 3 ரன், டாம் லாதம் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
நிதானமாக விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சன் அணியின் ரன்னை உயர்த்தினர். 69 பந்தில் 41 ரன்கள் எடுத்து வெளியேறினார்.சிறப்பாக விளையாடிய ஜேம்ஸ் நீஷம் , கொலின் டி கிராண்ட்ஹோம் இருவருமே அரைசதம் நிறைவு செய்தனர். இறுதியாக நியூஸிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 237 ரன்கள் சேர்த்தனர்.
நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜேம்ஸ் நீஷம் 97 ரன்கள் குவித்தார்.பாகிஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டை பறித்தார்.
பாகிஸ்தான் அணி 238 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரர்களாக இமாம் உல் ஹக் ,ஃபக்கர் ஜமான் இருவரும் களமிறங்கினார். ஆட்டம் தொடங்கிய மூன்றாவது ஓவரிலே ஃபக்கர் ஜமான் 9 ரன்களில் வெளியேற பின்னர் பாபர் ஆசாம் களமிறங்கினார்.
நிதானமாக விளையாடி கொண்டிருந்த இமாம் உல் ஹக் 19 ரன்னில் அவுட்டானார். அதன் பின்னர் களமிறங்கிய முகமது ஹபீஸ் 32 ரன்னில் அவுட் ஆனார்.அடுத்த வீரராக ஹரிஸ் சோஹைல் களமிறங்கினார்.
ஹரிஸ் சோஹைல் , பாபர் ஆசாம் இருவரின் கூட்டணியில் அதிரடி ஆட்டம் காட்டினர். இவர்கள் இருவரின் கூட்டணியில் 126 ரன்கள் குவித்தனர். ஹரிஸ் சோஹைல் 68 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
நிதானமாகவும் ,அதிரடியாகவும் விளையாடிய பாபர் ஆசாம் சதத்தை எட்டிப் பிடித்தார். இறுதியாக பாகிஸ்தான் அணி 49.1 ஓவரில் 4 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மேலும் முதன் முறையாக நியூஸிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பையில் தோல்வியை தழுவியுள்ளது.