நியூசிலாந்து கன்மேன் துப்பாக்கி சூடு முடிந்ததும் மசூதிகளை எரிக்க திட்டம் – வழக்கறிஞர் ஹவ்ஸ்

Default Image

நியூசிலாந்து கன்மேன் துப்பாக்கிசூடு முடிந்ததும் மசூதிகளை எரிக்க திட்டம்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி, நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூட்டில் 57 பேர் பலியாகினர். ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பயங்கரவாதியான பிரெண்டன் டாரண்ட் (வயது 25) தான் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்தார். இதனையடுத்து, இவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா, இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் தான் என உறுதி செய்தார். இதனையடுத்து, அந்நாட்டில் துப்பாக்கி பயன்பாட்டுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், வழக்கறிஞர் ஹவ்ஸ் இதுகுறித்து கூறுகையில், அவர் துப்பாக்கி சூடு முடிந்தவுடன் மசூதிகளை எரிக்க திட்டமிட்டிருந்ததாக அவரிடம் வாக்கும் மூலம் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்