கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது நியூசிலாந்து!
கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது நியூசிலாந்து.
முதலில் சீன நாட்டில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில் இதுவரை, 7,091,634 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 406,192 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நியூசிலாந்து நாட்டு கொரோனா இல்லாத நாடக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் கொரோனா தொற்று ஏற்பட்டதற்கு பின், அங்கு பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனையடுத்து, அங்கு இந்த வைரஸை தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்ட பின், தற்போது எந்த கொரோனா பாதிப்பும் பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில், நியூசிலாந்தில், 1,504 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, தற்போது நியூசிலாந்து கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கொரோனா பாதிப்புகள் மீண்டும் ஏற்படாமலிருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்காக தெரிவிக்கப்பட்டுள்ளது.