வீட்டுக்குள் ஏற்பட்ட துர்நாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்ற பெண்!

Published by
Rebekal
  • சீஸ் கடையிலிருந்து வந்த துர்நாற்றத்தால் பெண்மணி நீதிமன்றத்தில் வழக்கு.
  • தொல்லை தாங்காமல் கடையையே காலி செய்ய முடிவெடுத்த கடைக்காரர்.

தெற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு சீஸ் கடைக்கு மேல் உள்ள மாடி வீட்டில் குடியிருக்கும் பெண் தான் மனுவலா. இவர் இந்த சீஸ் கடைக்கு மேல்  இருப்பதால், தனது வீட்டிற்குள் கெட்ட வாடையாக வருகிறது  கூறியுள்ளார். ஆனால், அந்த சீஸ் கடை உரிமையாளர் அந்த வடை தனது கடையிலிருந்து வரவில்லை எனவும், அது பக்கத்து தெருவிலிருந்து வருகிறது எனவும் பல முறை கூறிவிட்டாராம்.

ஆனால், அதை சற்றும் கண்டுகொள்ளாத மனுவலா நீதிமன்றம் வரை இந்த பிரச்சனையை கொண்டு  சென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், தனது வீட்டில் உள்ள ஜன்னல் பக்கத்தில் அனைவர்க்கும் தெரியும் படியாய் மூக்கு கொண்ட  துர்நாற்றம் பொருள்படும் படத்தை ஒட்டியுள்ளாராம்.

இது தனது கடையின் இமேஜ்ஜை குறைக்கும் என கடைகிறாரா கூறியுள்ளார். இந்த பிரச்சனைக்கு நீதிமன்றம் மனுவலாவிடம், நீங்கள் கடைக்கு எதிராக வழக்கு தொடரலாம் ஆனால், அது போன்ற படங்களை உபயோகிக்க கூடாது என கூறியுள்ளார். என்றாலும் இந்த பிரச்சனை இவர்களுக்குள் மூன்று வருடங்களாக  தொடர்கிறதாம்.

மனுவலா தனது பிளக் பாய்ண்டுகளிலிருந்தெல்லாம் சீஸ் வடை வருவதாக கூறுவது தவறு, சதி செய்ய நினைத்து இவ்வாறு செய்கிறார்கள். இந்த பிரச்னை இப்படியே தொடர்வது பிடிக்கவில்லை, எனவே நான் கடையை காலி செய்கின்றேன் என சீஸ் கடை உரிமையாளர் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித் பேமிலி.! வைரல் போட்டோஸ்…

ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…

24 minutes ago

5 மாநில ஆளுநர்கள் மாற்றம் – குடியரசுத் தலைவர் உத்தரவு!

டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…

51 minutes ago

தமிழகத்தில் புதன்கிழமை (25/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…

11 hours ago

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் : மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை!

டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…

12 hours ago

இது தெரியாம போச்சே! இலவசமாக யூடியூப் பிரீமியம் வாங்குவது எப்படி தெரியுமா?

சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…

12 hours ago

வாய்ப்பு கொடுத்த கேப்டன்! வெஸ்ட் இண்டீஸை வெளுத்து விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த ஹர்லீன் தியோல்!

குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…

13 hours ago