வீட்டுக்குள் ஏற்பட்ட துர்நாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்ற பெண்!
- சீஸ் கடையிலிருந்து வந்த துர்நாற்றத்தால் பெண்மணி நீதிமன்றத்தில் வழக்கு.
- தொல்லை தாங்காமல் கடையையே காலி செய்ய முடிவெடுத்த கடைக்காரர்.
தெற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு சீஸ் கடைக்கு மேல் உள்ள மாடி வீட்டில் குடியிருக்கும் பெண் தான் மனுவலா. இவர் இந்த சீஸ் கடைக்கு மேல் இருப்பதால், தனது வீட்டிற்குள் கெட்ட வாடையாக வருகிறது கூறியுள்ளார். ஆனால், அந்த சீஸ் கடை உரிமையாளர் அந்த வடை தனது கடையிலிருந்து வரவில்லை எனவும், அது பக்கத்து தெருவிலிருந்து வருகிறது எனவும் பல முறை கூறிவிட்டாராம்.
ஆனால், அதை சற்றும் கண்டுகொள்ளாத மனுவலா நீதிமன்றம் வரை இந்த பிரச்சனையை கொண்டு சென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், தனது வீட்டில் உள்ள ஜன்னல் பக்கத்தில் அனைவர்க்கும் தெரியும் படியாய் மூக்கு கொண்ட துர்நாற்றம் பொருள்படும் படத்தை ஒட்டியுள்ளாராம்.
இது தனது கடையின் இமேஜ்ஜை குறைக்கும் என கடைகிறாரா கூறியுள்ளார். இந்த பிரச்சனைக்கு நீதிமன்றம் மனுவலாவிடம், நீங்கள் கடைக்கு எதிராக வழக்கு தொடரலாம் ஆனால், அது போன்ற படங்களை உபயோகிக்க கூடாது என கூறியுள்ளார். என்றாலும் இந்த பிரச்சனை இவர்களுக்குள் மூன்று வருடங்களாக தொடர்கிறதாம்.
மனுவலா தனது பிளக் பாய்ண்டுகளிலிருந்தெல்லாம் சீஸ் வடை வருவதாக கூறுவது தவறு, சதி செய்ய நினைத்து இவ்வாறு செய்கிறார்கள். இந்த பிரச்னை இப்படியே தொடர்வது பிடிக்கவில்லை, எனவே நான் கடையை காலி செய்கின்றேன் என சீஸ் கடை உரிமையாளர் கூறியுள்ளார்.