சீனாவில் புதிய வைரஸால் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர், 60 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவிலிருந்து தோன்றியதாகக் கூறப்படும் கொரோனா தொற்று நோயை தற்போது உலகம் முழுவதும் எதிர்த்துப் போராடி வரும் நிலையில் சீனாவில் தற்போது புதிய தொற்று நோயான tick-borne வைரஸ் அங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஜியாங்சுவின் தலைநகரான நாஞ்சிங்கைச் சேர்ந்த ஒரு பெண் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தது தெரிய வந்ததும் அவரது உடலின் உள்ளே லுகோசைட், ரத்த பிளேட்லெட் சரிவதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனிடையே ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு, அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இந்த வைரஸ் காரணமாக அன்ஹுய் மற்றும் கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வல்லுநர்கள் இந்த நோய்த்தொற்று மனிதர்களுக்கு உண்ணி மூலம் பரவியிருக்கலாம் என்றும் இந்த வைரஸ் தொற்று மனிதர்களிடையே பரவக்கூடும் என்றும் தெரிவித்தனர்.
ஜெஜியாங் பல்கலைக்கழகத்தின் கீழ் முதல் மருத்துவமனையின் மருத்துவர் ஷெங் ஜிஃபாங், மனிதனுக்கு பரவும் வாய்ப்பை கூற முடியாது என்று தெரிவித்தார். நோயாளிகள் இரத்தம் அல்லது சளி வழியாக வைரஸை மற்றவர்களுக்கு பரவும் என்றார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…