இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் சிவகார்த்திகேயனின் புதிய படம் ஆகிய அயலான் படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என புதிய அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் பிரபல நடிகர்களில் ஒருவராக இருக்க கூடிய நடிகர் தான் சிவகார்த்திகேயன். தொடர்ச்சியாக பல படங்களில் ஹிட் கொடுத்துக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தற்பொழுது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே டாக்டர் படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்பொழுது அயலான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க துவங்கியுள்ளார். இயக்குனர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ராகுல் பிரீத் சிங் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் இஷா கோபிகர் அவர்கள் நடிக்கிறார்கள் எனவும், இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைப்பதுடன் அவருடன் சேர்ந்து முத்துராஜ் அவர்களும் இசை அமைக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு அண்மையில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்பு நிறைவடைய 10 மாதங்கள் ஆகும் என கூறப்பட்டுள்ளது. தாமதமானாலும் படம் கிறிஸ்மஸ் தினத்தன்று வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…