இந்த வார இறுதிக்குள் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படக்குழு தற்போது ரஸ்யா சென்றுள்ளது. அங்கு, சில ஆக்சன் காட்சிகளுக்கான காட்சிகளை மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளதாம். அந்த காட்சிகள் படத்திற்கு மிக முக்கியமானதாம். அந்த படப்பிடிப்பை இந்த வாரத்திற்குள் முடிந்து, படக்குழு நாடு திரும்பிவிடுவார்களாம்.
அடுத்ததாக இந்த வாரம் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு ரிலீஸ் தேதி மற்றும் டீசர் குறித்த அப்டேட்டை வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…