வலிமை திரைப்படத்தின் புதிய அப்டேட்..!!
வலிமை திரைப்படத்தின் லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை.வலிமை திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்திருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒத்திவைப்பதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது படத்திலிருந்து கிடைத்த தகவல் வலிமை படத்திற்கான 90% படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும். மீதமுள்ள 10% படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற திட்டிமிட்டுந்தார்கள். ஆனால் தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெறுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய ஸ்டண்ட் காட்சி மட்டும் படமாக்கப்படவுள்ள நிலையில், அந்த கட்சியை மட்டும் படமாகிவிட்டால் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரைவில் படத்திற்கான முதல் பாடல் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.