வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் புதிய அப்டேட்.!
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 6- ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூரில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், வரும் 26-ஆம் தேதியுடன் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் இந்த படத்தை முடித்துவிட்டு நடிகர் சிம்பு அடுத்ததாக பத்து தல கொரோனா குமார் ஆகிய திரைப்படங்களில் நடிக்கவுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.