சுல்தான் திரைப்படத்தின் புதிய அப்டேட்..!

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள திரைப்படம் சுல்தான். இந்த படம் நடிகை ரஷ்மிகா மந்தனாவிற்கு தமிழில் முதல் படமாகும். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சுல்தான் திரைப்படம் வெளியாகும் வெளியாகாத என்ற கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் ஏற்பட்டது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு கடந்த ஆகஸ்ட் மாதம் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் சுல்தான் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் எடிட்டிங் மற்றும் மீதமுள்ள பணிகளை முடித்துக் கொண்டு இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் மீண்டும் படத்தின் படப்பிடிப்புகள் துவங்க மத்திய மாநில அரசுகள் அனுமதித்த நிலையில், தற்பொழுது சுல்தான் திரைப்படத்தின் மீதமுள்ள காட்சிகளை படமாக்கி முடித்து விட்டதாக கூறப்படுகிறது. சுல்தான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதை புகைப்படத்துடன் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025