ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியீடப்படவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இயக்குனர் ராஜமௌலி பாகுபலியின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின் தற்போது ‘ஆர்ஆர்ஆர்'(ரத்தம், ரணம், ரௌத்திரம்) எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.பான்-இந்தியா படமாக உருவாகும் “ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி , ஸ்ரேயா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும் பல ஹாலிவுட் பிரபலங்களும் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கான படப்பிடிப்பு 15 நாட்கள் மீதமுள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவல் பிரச்சனை முடிந்த பிறகு தான் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாளை நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது 38 வது பிறந்த நாளை கொண்டவுள்ளார். அவருக்கு பரிசளிக்கும் வகையில், ஆர்ஆர்ஆர் படத்தில் அவர் நடிக்கும் கொமரம் பீம் கதாபாத்திரத்திற்கான புதிய போஸ்டர் வெளியீடபடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் காத்துள்ளார்கள்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…