ஆர்ஆர்ஆர் படத்தின் புதிய அப்டேட்..! உற்சாகத்தில் ரசிகர்கள்.!
ஆர்ஆர்ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ வருகின்ற ஜூலை 15 -ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ராஜமௌலி பாகுபலியின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின் தற்போது ‘ஆர்ஆர்ஆர்'(ரத்தம், ரணம், ரௌத்திரம்) எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். பான்-இந்தியா படமாக உருவாகும் “ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் பல ஹாலிவுட் பிரபலங்களும் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்திலிருந்து வெளியான போஸ்டர்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இந்த நிலையில், தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ வருகின்ற ஜூலை 15 – ஆம் தேதி வெளியாகும் என்று நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Get ready for the #RoarOfRRR! ????
A glimpse into the making of #RRRMovie on July 15th, 11 AM. ????????@ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @RRRMovie @DVVMovies @PenMovies @LycaProductions pic.twitter.com/1gDm3tVu74— RRR Movie (@RRRMovie) July 11, 2021