கருணாஸுக்கு ஜோடியான ரித்விகா.! “ஆதார்” படத்தின் புதிய அப்டேட்.!!
கருணாஸ் – ரித்விகா இணைந்து நடிக்கும் “ஆதார்” படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
பிக் பாஸ் புகழ்பெற்ற ரித்விகா அடுத்ததாக கருணாஸிற்கு ஜோடியாக “ஆதார்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை, கருணாஸ் நடித்த அம்பானி சமுத்திரம், ஜீவா நடித்த திருநாள், போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராம்நாத் இயக்குகிறார்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ளார். மேலும் நடன இயக்குனராக ஸ்ரீதர் மாஸ்டர் பணியாற்றுகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், கடந்த ஜூலை 17-ஆம் தேதி தொடங்கப்பட்ட இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளது. விரைவில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்று படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அதற்கான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் கருணாஸ், ரித்விகா, ராம்நாத் ஆகியோர் உள்ளனர்.